மங்களூரில் புதிய தொழிற்பயிற்சி நிலையம் அமைச்சர் சி.வெ.கணேசன் திறந்து வைத்தார்


மங்களூரில் புதிய தொழிற்பயிற்சி நிலையம் அமைச்சர் சி.வெ.கணேசன் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 8 Jan 2023 12:15 AM IST (Updated: 8 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மங்களூரில் புதிய தொழிற்பயிற்சி நிலையத்தை அமைச்சர் சி.வெ.கணேசன் திறந்து வைத்தார்.

கடலூர்

சிறுபாக்கம்,

மங்களூரில் புதிய தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டு, அதன் தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு தொழிற்பயிற்சி நிலைய விழுப்புரம் மண்டல இணை இயக்குனர் ஜான் போஸ்கோ தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் சுகுணா சங்கர், அட்மா குழு தலைவர் செங்குட்டுவன், திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு காவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ராமு வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் கலந்து கொண்டு தொழிற்பயிற்சி நிலையத்தை திறந்து குத்து விளக்கு ஏற்றிவைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், மாவட்டத்தில் பின்தங்கிய பகுதிகளை சேர்ந்த மக்களை மேம்படுத்துவதற்காக மங்களூரில் இந்த புதிய தொழிற்பயிற்சி நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார். இந்த புதிய தொழிற்பயிற்சி நிலையத்திற்கு விரைவில் ரூ.8.40 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்படும் என்றாா். விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுருநாதன், முருகன், பொறியாளர் செந்தில்வடிவு, வேப்பூர் துணை தாசில்தார் மஞ்சுளா, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சின்னசாமி, அமிர்தலிங்கம், வேல்முருகன், பாவாடை கோவிந்தசாமி, நகர செயலாளர் பரமகுரு, ஊராட்சி துணைத் தலைவர் ரேகா ராஜசேகர், நிர்வாகிகள் குமணன், திருவள்ளுவன், சேகர், சின்னதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story