ரிஷிவந்தியம் தொகுதியில் மக்களை தேடி மனுக்கள் பெறுதல் முகாம் அமைச்சர் எவவேலு பங்கேற்பு
ரிஷிவந்தியம் தொகுதியில் மக்களை தேடி மனுக்கள் பெறுதல் முகாம் அமைச்சர் எவவேலு பங்கேற்பு
திருக்கோவிலூர்,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி மக்களை தேடி மனுக்கள் பெறுதல் முகாம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முருக்கம்பாடி, சித்தப்பட்டினம், திருவரங்கம், ஜம்படை, சீர்னந்தல், சிறுபனையூர் ஆகிய 6 கிராமங்களில் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள், துணைத்தலைவர் வக்கீல் தங்கம், ரிஷிவந்தியம் ஒன்றியக்குழு தலைவர் வடிவுக்கரசி சாமிசுப்பிரமணியன், மணலூர்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் ரேவதிஜெய்கணேஷ், இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட தலைவர் வக்கீல் பாலாஜிபூபதி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆவின் துணை தலைவர் ஜம்பை பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சருமான எ.வ.வேலு கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து 700 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
நலத்திட்ட உதவிகள்
அப்போது அவர் பேசுகையில் மக்களைத் தேடி மனுக்கள் பெறுதல் நிகழ்ச்சி, மாநிலத்திலேயே முதன்முறையாக ரிஷிவந்தியம் தொகுதியில் தொடங்கப்பட்டிருக்கிறது. உங்களிடம் பெற்ற மனுக்களில் சிலவற்றை இப்போதே படித்து அதற்கு இங்கேயே உத்தரவு பிறப்பித்து இருக்கிறேன். மீதமுள்ள மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமார் ஒரு மாதம் நடைபெறும் இந்த முகாமில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவினர் கிராமத்திற்கே சென்று, பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, அதனை மாவட்ட கலெக்டரிடம் கொடுத்து தீர்வு காண உத்தரவிட்டு உள்ளேன். இந்த முகாம்களில் பெறப்படும் அனைத்து மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும். இங்கு தனிப்பட்ட நபர்களின் கோரிக்கைகளுக்கு தான் மனு கொடுக்க வேண்டும் என்று இல்லை. உங்கள் ஊருக்கு தேவையான வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் மனுக்கள் கொடுக்கலாம். அதன் மீதும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் யோகஜோதி, தாசில்தார் கண்ணன், ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரங்கராஜன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தினகர்பாபு, ரிஷிவந்தியம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாரதிதாசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜீவ்காந்தி, மேலந்தல் தண்டபாணி மற்றும் பல்வேறு துணை அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மணலூர்பேட்டை நகர தி.மு.க. செயலாளர் வக்கீல் எம். ஜெய்கணேஷ் நன்றி கூறினார்.