ரூ.38.40 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிமெண்டு சாலை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்
ரூ.38.40 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிமெண்டு சாலையை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்.
ராணிப்பேட்டை
ரூ.38.40 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிமெண்டு சாலையை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்.
வாலாஜா ஒன்றியம் தெங்கால் ஊராட்சியில், தெங்கால் மெயின் ரோடு சுமார் 180 மீட்டர் நீளத்திற்கு ஊராட்சி சாலையாக இருந்து வருகிறது. இந்த சாலைக்கு முன்பும், பின்பும் நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் இருந்து வந்த சாலை 180 மீட்டர் நீளத்திற்கு நெடுஞ்சாலை துறை மூலமாக போடப்பட்டது. கிராம ஊராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த கிராம சாலை நீண்ட நாட்களாக போடப்படாமல், பொதுமக்கள் மிகவும் அவதியுற்று வந்தனர்.
இது குறித்து கைத்தறி மற்றும் துறை அமைச்சர் காந்தியிடம் முறையிட்டனர். அவர்களது கோரிக்கையை ஏற்று சாலை அமைக்க, ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.38.40 லட்சம் நிதியினை அமைச்சர் காந்தி வழங்கினார்.
அதன் அடிப்படையில் நெடுஞ்சாலை துறை மூலம் 180 மீட்டர் நீளத்திற்கு 5.5 மீட்டர் அகலத்தில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவுக்கு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் போடப்பட்ட சாலையின் கல்வெட்டினை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, வாலாஜா ஒன்றியக் குழு தலைவர் சேஷா வெங்கட், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் செல்வகுமார், ஒன்றியக்குழு உறுப்பினர் கோமதி விஜயகுமார், ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா பத்மநாபன், துணைத் தலைவர், துணைத் தலைவர் பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
============
2 படம்