பெரியார் சிலைக்கு, அமைச்சர் காந்தி மாலை அணிவித்து மரியாதை


பெரியார் சிலைக்கு, அமைச்சர் காந்தி மாலை அணிவித்து மரியாதை
x

ராணிப்பேட்டையில் பெரியார் சிலைக்கு, அமைச்சர் காந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் ராணிப்பேட்டை அருகே அம்மூர் சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரும், ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளருமான ஆர்.காந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் ஈஸ்வரப்பன் எம்எல்ஏ, மாவட்ட துணை செயலாளர் ஏ.கே.சுந்தரமூர்த்தி, வாலாஜா ஒன்றியக்குழு தலைவர் சேஷா வெங்கட், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத், துணை அமைப்பாளர் வக்கீல் ஜெயக்குமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் அப்துல்லா, ராணிப்பேட்டை நகர செயலாளர் பூங்காவனம், துணை செயலாளர் ஏர்டெல் குமார், அம்மூர் பேரூராட்சி துணைத்தலைவர் உஷாராணி அண்ணாதுரை மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்துக்கு தி.மு.க. நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.


Next Story