தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் மக்கள் குறைகேட்கிறார்


தினத்தந்தி 7 April 2023 12:15 AM IST (Updated: 7 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் மக்கள் குறைகேட்கிறார்

தூத்துக்குடி

தூத்துக்குடியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் மாநகராட்சி 32-வது வார்டு பகுதியில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்கிறார். நாளை (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து 18-வது வார்டு பகுதியில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்கிறார்.

நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னமணிநகர் பூங்கா அருகில் ஆவின் பாலகத்தை திறந்து வைக்கிறார். அதனை தொடர்ந்து மாநகராட்சி 19-வது வார்டு பகுதியில் மாலை 5.30 மணிக்கு பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்கிறார். இந்த நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம்.

இந்த தகவலை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்து உள்ளார்.


Next Story