அமைச்சர் கா.ராமச்சந்திரன் தேர்தல் பிரசாரம்வடை சுட்டு வாக்கு சேகரித்த எம்.எல்.ஏ.
வடை சுட்டு
ஈரோடு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்து தமிழக சுற்றுலாத்துைற அமைச்சர் கா.ராமச்சந்திரன் தினமும் வாக்காளர்களை சந்தித்து ஓட்டு கேட்டு வருகிறார். அவர் நேற்று காலை ஈரோடு திருநகர்காலனி பகுதியில் வீடுகள், கடைகளுக்கு சென்று கை சின்னத்துக்கு ஓட்டு கேட்டார். அப்போது அங்குள்ள ஒரு டீக்கடைக்கு சென்று அமைச்சர் கா.ராமச்சந்திரன் வாக்கு சேகரித்தார். அவருடன் வந்த திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் எம்.எல்.ஏ. கடையில் வடை சுட்டு கொடுத்து பொதுமக்களிடம் கை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார். இந்த பிரசாரத்தின்போது மாநகராட்சி கவுன்சிலர் ஜெயந்தி உள்பட பலர் உடன் சென்றனர்.
Related Tags :
Next Story