அண்ணா, கருணாநிதி சிலைகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவிப்பு
அமைச்சர் கே.என்.நேரு தனது பிறந்தநாளையொட்டி அண்ணா, கருணாநிதி சிலைகளுக்கு மாலை அணிவித்தார். தொண்டர்கள் திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்தனர்.
அமைச்சர் கே.என்.நேரு தனது பிறந்தநாளையொட்டி அண்ணா, கருணாநிதி சிலைகளுக்கு மாலை அணிவித்தார். தொண்டர்கள் திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்தனர்.
பிறந்த நாள் விழா
தி.மு.க. முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து அவர் நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன்பிறகு அவர் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து திருச்சி திரும்பினார்.
நேற்று தனது பிறந்தநாளை முன்னிட்டு அவர் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அறிஞர் அண்ணா மற்றும் கருணாநிதியின் உருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன்பிறகு கலைஞர்அறிவாலயம் மற்றும் தில்லைநகர் சாஸ்திரிரோட்டில் உள்ள தனது அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை பல மணிநேரம் சந்தித்தார். அப்போது ஏராளமானோர் நீண்டவரிசையில் காத்திருந்து அமைச்சர் கே.என்.நேருவுக்கு மாலை அணிவித்தும், சால்வை அணிவித்தும், நினைவு பரிசுகள் வழங்கியும் பிறந்தநாள் வாழ்த்து கூறினர்.
சிறப்பு வழிபாடு
மேலும், அமைச்சரின் பிறந்தநாளையொட்டி தி.மு.க.வினர் திருச்சி மாநகர், புறநகரில் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் சிறப்பு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து குழந்தைகள் காப்பகம், விழிஇழந்தோர் பள்ளி, ஆதரவற்றோர் இல்லங்களில் குழந்தைகளுக்கு உணவும் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சிகளில் கட்சி நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
எம்.எல்.ஏ.க்கள்
பிறந்த நாள் விழாவில் எம்.எல்.ஏ.க்கள் பழனியாண்டி, ஸ்டாலின் குமார், கதிரவன், ஒன்றிய செயலாளர்கள் எஸ்.ஏ.எஸ். ஆரோக்கியசாமி (மணப்பாறை கிழக்கு), மாத்தூர் கருப்பையா (மணிகண்டம்), இளங்கோவன் (புள்ளம்பாடி தெற்கு), செல்வராஜ் (புள்ளம்பாடி வடக்கு), கதிர்வேல் (அந்தநல்லூர்), முத்துச்செல்வன் (உப்பிலியபுரம்), ஒன்றிய குழுதலைவர்கள் துரைராஜ் (அந்தநல்லூர்), ரசியா கோல்டன் ராஜேந்திரன் (புள்ளம்பாடி), கமலம் கருப்பையா (மணிகண்டம்), ஒன்றிய குழு துணைத்தலைவர்கள் புவனேஸ்வரி பாலசுப்பிரமணி (மணப்பாறை ஒன்றியம்), ஸ்ரீவித்யா ரமேஷ்குமார் (வையம்பட்டி ஒன்றியம்), கனகராஜ் (புள்ளம்பாடி ஒன்றியம்), பேரூராட்சி தலைவர்கள் பால்துரை (கல்லக்குடி), புவனேஷ்வரி பால்ராஜ் (பூவாளூர்), பஞ்சாயத்து தலைவர்கள் அல்லித்துறை சரவணன், மல்லியம்பத்து விக்னேஷ்வரன், தச்சங்குறிச்சி பொன் தர்மராஜ், சித்தாநத்தம் ரவிச்சந்திரன் மற்றும் பஞ்சப்பூர் பெரியசாமி, திருச்சி வடக்கு மாவட்ட அவைத்தலைவர் அம்பிகாபதி, மணப்பாறை கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் சக்திவேல், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கருணாநிதி, தலைமை செயற்குழு உறுப்பினர் சபிபுல்லா,
புள்ளம்பாடி பேரூர் தி.மு.க.செயலாளர் முத்துகுமார், 23-வது வட்ட தி.மு.க. சிவக்குமார், மாவட்ட பிரதிநிதி சீனிவாசன், வட்ட பிரதிநிதி ஜெயராமன், காங்கிரஸ் மாநில செயலாளர் ரமேஷ்குமார் உள்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.