29 ஊராட்சிகளுக்கு மின்கல வாகனங்கள்-அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்


29 ஊராட்சிகளுக்கு மின்கல வாகனங்கள்-அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்
x

29 ஊராட்சிகளுக்கு மின்கல வாகனங்களை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்

திருச்சி

புள்ளம்பாடி ஒன்றியம் ஊட்டத்தூர், ஆலம்பாடி, கல்லகம், இ.வெள்ளனூர், தெரணிபாளையம், சரடமங்கலம் உள்ளிட்ட 29 ஊராட்சிகளுக்கு ரூ.72 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பில் மின்கல வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி, காணக்கிளியநல்லூர் ஊராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.10.19 லட்சத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம், ரூ.23.56 லட்சத்தில் கிராம சுயாட்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார்.மாவட்ட திட்ட அலுவலர் தேவநாதன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கங்காதரணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினரான தமிழக நகர்ப்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல்துறை அமைச்சர் கே.என்.நேரு மின்கல வாகனங்களை வழங்கியும், புதிய கட்டிடங்களையும் திறந்து வைத்தார். மேலும் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி பெட்டகங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவில் தி.மு.க. மத்திய மாவட்டசெயலாளர் வைரமணி, புள்ளம்பாடி ஒன்றிய குழு தலைவர் ரசியாகோல்டன் ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், ராஜேந்திரன், ஒன்றியசெயலாளர்கள் செல்வராசா, இளங்கோவன், ஊராட்சி மன்ற தலைவர் சிங்க ராயர், முன்னாள் தலைவர் ராஜமாணிக்கம், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். .முன்னதாக புள்ளம்பாடி வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வரவேற்றார்.முடிவில் காணக்கிளியநல்லூர் ஊராட்சி செயலாளர் நேரு நன்றி கூறினார்.


Next Story