வேளாண் கண்காட்சியை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார்
வேளாண் கண்காட்சியை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார்
திருச்சி
திருச்சி கேர் பொறியியல் கல்லூரியில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் வேளாண் சங்கமம்-2023 வேளாண்மை கண்காட்சி தொடங்கியது. இதனை நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கண்காட்சியின் 2-வது நாளான நேற்று அமைச்சர் கே.என்.நேரு அரங்குகளை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அரங்குகளின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். பின்னர் அனைவரும் கண்காட்சி அரங்கு முன்பு புகைப்படம் எடுத்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை துறை ஆணையர் சுப்பிரமணியன், வேளாண்மைத்துறை சிறப்பு செயலர் டாக்டர் நந்தகோபால், மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், இணை இயக்குனர் (வேளாண்மை) முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story