அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு
மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
திருவாரூர்
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நேற்று முன்தினம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஆஸ்பத்திரியில் இங்கி வரும் ஆர்.டி.பி.சி.ஆர். ஆய்வகத்தில் இதுவரை பரிசோதனை செய்த ரத்த மாதிரி குறித்த விவரங்கள் அடங்கிய பதிவேடுகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து 20 படுக்கைகள் கொண்ட அதிதீவிர சிகிச்சை பிரிவினை பார்வையிட்டு அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டு அறிந்தார்.இந்த ஆய்வின் போது மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ, சுகாதாரத்துறை இணை இயக்குனர் செல்வகுமார், துணை இயக்குனர் ஹேமசந்த் காந்தி, ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார், மன்னார்குடி நகர மன்ற தலைவர் மன்னை சோழராஜன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் வீரா.கணேசன் உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story