சிதம்பரம் அரசு மருத்துவமனையில் ரூ.5¾ கோடியில் உள்நோயாளிகள் பிரிவு கட்டிடம் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்


சிதம்பரம் அரசு மருத்துவமனையில் ரூ.5¾ கோடியில் உள்நோயாளிகள் பிரிவு கட்டிடம் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்
x
தினத்தந்தி 13 Aug 2023 12:15 AM IST (Updated: 13 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் ரூ.5¾ கோடியில் உள்நோயாளிகள் பிரிவு கட்டிடம் கட்டுவதற்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அடிக்கலட் நாட்டினார்.

கடலூர்

சிதம்பரம்,

சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனையில் கடலூர் மாவட்ட கனிம அறக்கட்டளை நிதி திட்டத்தின் மூலம் ரூ.5 கோடியே 73 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பில் 100 படுக்கைவசதி கொண்ட உள்நோயாளிகள் பிரிவு கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், சிதம்பரம் சப்-கலெக்டர் சுவேதா சுமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் லட்சுமி வரவேற்றார். வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கடலூர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பிரமிளா, தாசில்தார் செல்வக்குமார், சிதம்பரம் நகரமன்ற தலைவர் கே.ஆர்.செந்தில்குமார், நகராட்சி ஆணையாளர் பிரபாகரன், திட்டக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி வி.என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, வெங்கடேசன், கவுன்சிலர்கள் அப்புசந்திரசேகரன், ஏ.ஆர்.சி மணிகண்டன், மக்கள்.அருள், சரவணன், அசோகன், நகர துணை செயலாளர்கள் பா.பாலசுப்பிரமணியன், இளங்கோவன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஶ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதிய பஸ் நிலையம்

தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில், அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்ட உள்நோயாளிகள் பிரிவு கட்டிடம் 6 மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும். சிதம்பரத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.

காட்டுமன்னார்கோவில் அருகே உப்புநீர் உள்ளே புகாமல் இருக்க கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை அமைக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story