மாநகராட்சி வளர்ச்சி பணிகளை அமைச்சர் மூர்த்தி ஆய்வு


மாநகராட்சி வளர்ச்சி பணிகளை அமைச்சர் மூர்த்தி ஆய்வு
x

மாநகராட்சி வளர்ச்சி பணிகளை அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தார்

மதுரை


மதுரை மாநகராட்சியில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை அமைச்சர் மூர்த்தி நேற்று ஆய்வு செய்தார். அப்போது நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜீத் சிங், மேயர் இந்திராணி ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த ஆய்வின் போது அமைச்சர் மூர்த்தி, சம்பக்குளம் மெயின் ரோடு பகுதியில் ரூ.97 லட்சம் செலவில் நடந்து வரும் புதிய சாலைகள் அமைக்கும் பணி, முல்லை பெரியாறு அணை குடிநீர் வினியோகத்திற்காக கட்டப்பட்டு வரும் நீர் தேக்க தொட்டிகள், உச்சபரம்பு, திருப்பாலை ஆகிய பகுதிகளில் தற்காலிக சாலை அமைக்கும் பணிகளையும் அமைச்சர் மூர்த்தி பார்வையிட்டார்.

அப்போது அவர், மக்கள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். காலதாமதம் செய்ய கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Next Story