அருங்காட்சியகத்தை பார்வையிட்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
அருங்காட்சியகத்தை பார்வையிட்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
நீலகிரி
ஊட்டி
நீலகிரி மாவட்டம் குன்னூரில் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு அருகே, போரில் உயிர் நீத்த வீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவு தூண் உள்ளது. இந்த நிலையில் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு வந்த தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், போர் நினைவு தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டு உள்ள பார்வையாளர் புத்தகத்தில் கையெழுத்திட்டார். பின்னர் ராணுவ அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். அப்போது லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.மோகன் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story