தூத்துக்குடியில்குரூஸ் பர்னாந்து சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை


தூத்துக்குடியில்குரூஸ் பர்னாந்து சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 19 Nov 2022 12:15 AM IST (Updated: 19 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில்குரூஸ் பர்னாந்து சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி நகருக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு வந்த குரூஸ்பர்னாந்து பிறந்தநாள் விழா கடந்த 15-ந் தேதி கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று காலையில் மாலை அணிவித்து மரிாயதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, தி.மு.க.மாநில மாணவரணி துணைச்செயலாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம், துணைச்செயலாளர் ஆறுமுகபெருமாள், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் சந்திரசேகர், பொருளாளர் ராமநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தூர்மணி, மாடசாமி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்..


Next Story