ஜும்மா பள்ளிவாசல் திறப்பு விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்பு
கிருங்கக்கோட்டை ஊராட்சியில் ஜும்மா பள்ளிவாசல் திறப்பு விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டார்.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிருங்கக்கோட்டை ஊராட்சியில் ஜும்மா பள்ளிவாசல் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கிருங்காக்கோட்டை ஜமாத் தலைவர் முகமது மீரா தலைமை தாங்கினார்.. ஜனாப் ஹாஜி ஜமால் முகமது, சிங்கம்புணரி ஜமாத்தலைவர் ஜனாப் ராஜா முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கூட்டுறவுத்துறை அ மைச்சரும் தி.மு.க. சிவகங்கை மா வட்ட செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பன் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டார். முன்னதாக தொ டக்க உரை யை இமாம் கூபா பள்ளிவாசல் சாதிக் பாஷா ஆற்றினார்.
நிகழ்ச்சியில் கிருங்காகோ ட்டை ஊரா ட்சி மன் ற தலைவர் அகிலா கண்ணன், முன்னாள் ஊரா ட்சி மன்ற தலைவர் ராசியப்பன், ஜோதி அம்பலம், ஊரா ட்சி மன்ற துணை த்தலைவர் அமுதா சண்முகம், சிங்கம்புணரி பேரூராட்சி மன்ற தலைவர் அம்பலமுத்து, தி.மு.க. ஒன்றிய செயலாளர் பூமிநாதன், நகர அவைத்தலைவர் சிவக்குமார் ரங்கநாதன், ஒன்றிய அவை தலைவர் ராசு, பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் இந்தியன் செந்தில், சிங்கம்புணரி நகர செயலாளர் கதிர்வேல், ஒன்றிய செயலாளர் சிவபுரி சேகர் மற்றும் பிரதிநிதிகள் குடோன்மணி, புகழேந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.