அனைத்து தொகுதிகளிலும் விரைவில் அரசு கல்லூரி - அமைச்சர் பொன்முடி தகவல்
சட்டப்பேரவையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இல்லாத தொகுதிகளில் கல்லூரிகள் உருவாக்கப்படு வதை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
சென்னை,
சட்டப்பேரவையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இல்லாத தொகுதிகளில் கல்லூரிகள் உருவாக்கப்படு வதை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பொன்முடி பேசியதாவது ,
தமிழ்நாட்டில் அரசு கலைக் கல்லூரிகள் இல்லாத தொகுதிகளில் நிதிநிலைக்கேற்ப ஆய்வு செய்து அரசு கலைக் கல்லூரிகள் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
திமுக அரசு அமைந்த பிறகு தமிழ்நாட்டில் இதுவரை 31 அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை தொகுகளில் மட்டும் 3 கலைக்கல்லூரிகள் உள்ளன. சுயநிதி கல்லூரிகளை விட அரசு கலைக் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கே மாணவர்கள் அதிகயளவில் விருப்பம் காட்டி வருவதாக அமைச்சர் பொன்முடி கூறினார்.
Related Tags :
Next Story