திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சாமி தரிசனம்
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார்.
மயிலாடுதுறை
திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு பக்தர்கள் தங்கள் ஆயுள் விருத்திக்காக வழிபாடு செய்வது சிறப்பம்சமாகும். பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் நேற்று வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கணேச குருக்கள் பிரசாதம் வழங்கினார். அப்போது வேளாண்மை துறை இயக்குனர் சேகர், தோட்டக்கலை உதவி இயக்குனர் ரமேஷ், வேளாண்மை உதவி இயக்குனர் தாமஸ் மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story