சித்தர் கோவில் வனவிரிவாக்க மையத்தில் அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு


சித்தர் கோவில் வனவிரிவாக்க மையத்தில் அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு
x

சித்தர் கோவில் வனவிரிவாக்க மையத்தில் அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.

சேலம்

இளம்பிள்ளை:

சேலம் மாவட்டம் சித்தர் கோவில் வனவிரிவாக்க மையத்தில் உள்ள நாற்றங்கால் பண்ணையில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். அப்போது நாற்றங்கால் பண்ணையில் விவசாயிகளுக்கு வழங்க வைக்கப்பட்டுள்ள தேக்கு, செம்மரம், மலைவேம்பு, நாவல், மகாகனி போன்ற மரக்கன்றுகளை பார்வையிட்டார். மேலும் நாற்று உற்பத்தியை அதிகரிக்க 10 எக்டேர் பரப்பில் தனியார் நிலத்தை வாடகை எடுத்து, அதில் 4 அடி உயரத்தில் மரக்கன்றுகளை வளர்த்து விவசாயிகளுக்கு வழங்கவும், செம்மரக்கன்றுகளை அதிக அளவில் தரமாக உற்பத்தி செய்து பருவமழைக்கு முன்பு விவசாயிகளுக்கு வழங்கவும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து மரக்கன்றுகள் உற்பத்தி மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின்போது சேலம் மண்டல வனபாதுகாவலர் பெரியசாமி, உதவி வனபாதுகாவலர் கண்ணன், வேளாண்மை அலுவலர் காயத்ரி, சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, சித்தர் கோவில் வனச்சரக அலுவலர் நீலமேகன், மகுடஞ்சாவடி ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் பச்சமுத்து ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story