ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு


ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
x
தினத்தந்தி 1 May 2023 12:15 AM IST (Updated: 1 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்:

ரிஷிவந்தியம் கிராமத்தில் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவபெருமானுக்கு நடைபெறும் தேனாபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இக்கோவிலில் திருப்பணி மேற்கொள்ள இந்து சமய அறநிலையத்துறை ரூ.66 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது.

இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று காலை கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.

புதிய செலவின அறிக்கை

பின்னர் அவர், கோவிலை சுற்றி ஆய்வு செய்தார். உட்பிரகாரத்தில் தண்ணீர் தேங்கி பாசிபடிந்த இடங்களை சுத்தம் செய்ய வேண்டும், வெளிப்புறத்தை சுத்தமாக பராமரித்து செடிகள் வளர்க்க வேண்டும், கோவில் பணியாளர்களின் வருகையை கண்காணிக்க பயோமெட்ரிக் கருவி பொருத்த வேண்டும், கோவிலுக்கு வெளியே உள்ள அகத்தியர் மற்றும் இந்திர தீர்த்த குளங்களை பராமரிக்க புதிய செலவின அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறநிலையத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதனை தொடர்ந்து, ரிஷிவந்தியம் ராஜநாராயண பெருமாள் கோவிலில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவாகரன், செயல் அலுவலர் அருள், தி.மு.க. ஒன்றிய செயலாளர் பெருமாள், ஆடிட்டர் சாமி சுப்ரமணியன், நிர்வாகி சிவமுருகன், ஆலய பணியாளர்கள் உடன் இருந்தனர்.


Next Story