மதுரை கோவில்களில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு


மதுரை கோவில்களில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
x

மதுரை கோவில்களில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை


மதுரை கோவில்களில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார்.

அமைச்சர் ஆய்வு

மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில், குடமுழுக்கு நடத்துவதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனால் கோவில் முழுவதும் பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை, ஆய்வு செய்வதற்காக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று இரவு மதுரை வந்தார்.

இதையொட்டி கோவிலில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்த அவர், தொடர்ந்து ராஜகோபுரம், கோவில் குளம், சுந்தர்ராஜ பெருமாள் சன்னதி, தாயார் சன்னதி, ஆண்டாள் சன்னதி, கோவில் தூண்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொண்டார்.

பழமை மாறாமல்

இதனைத் தொடர்ந்து அமைச்சர் சேகர் பாபு நிருபர்களிடம் கூறுகையில், பிரசித்திபெற்ற கூடலழகர் கோவில் பழமை மாறாமல் கும்பாபிஷேகத்திற்காக முதற்கட்டமாக 20 பணிகள் முடுக்கி விடப்பட்டு நடைபெற்று வருகிறது என்றார்.

ஆய்வின்போது அறநிலையத்துறை திருப்பணிகள் இணைஆணையர் சுதர்சன், மற்றும் மதுரை அறநிலையத்துறை அதிகாரிகள் செல்லதுரை, அருணாச்சலம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இது போல், மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூர் காளமேக பெருமாள் கோவில், யோக நரசிங்க பெருமாள் கோவிலிலும் அமைச்சர் ஆய்வு செய்தார்.


Next Story