அமைச்சர் தங்கம் தென்னரசு அஞ்சலி
முன்னாள் எம்.பி. ராதாகிருஷ்ணனின் உடலுக்கு அமைச்சர் தங்கம் ெதன்னரசு அஞ்சலி செலுத்தினார்.
சிவகாசி,
முன்னாள் எம்.பி. ராதாகிருஷ்ணனின் உடலுக்கு அமைச்சர் தங்கம் ெதன்னரசு அஞ்சலி செலுத்தினார்.
தி.மு.க.வினர் அஞ்சலி
விருதுநகர் தொகுதியின் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. டி.ராதாகிருஷ்ணன். நேற்று முன்தினம் மாலை உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்த போது பரிதாபமாக இறந்தார். இதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் வடபட்டியில் உள்ள ராதாகிருஷ்ணனின் பூர்வீக வீட்டுக்கு சென்று அங்கு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் நேற்று காலை அமைச்சர் தங்கம் தென்னரசு, தி.மு.க. மாநில நிர்வாகி வனராஜா, மாநகர செயலாளர் உதயசூரியன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் முன்னாள் எம்.பி. ராதாகிருஷ்ணனின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.
இறுதி சடங்கு
அதேபோல அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.டி. ராஜேந்திர பாலாஜி, மாபா பாண்டியராஜன், ஓ.எஸ்.மணியன், அவைத்தலைவர் தமிழ்மகேன் உசேன், மான்ராஜ் எம்.எல்.ஏ., மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வசந்தி மற்றும் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் வடபட்டியில் உள்ள ராதாகிருஷ்ணன் வீட்டிற்கு சென்று அங்கு அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினர்.
இதே போல் இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கீர் மற்றும் நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன் உடலுக்கு மரியாதை செலுத்தினர். முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சியினர், ஊர் மக்கள் மற்றும் உறவினர்களின் அஞ்சலிலுக்கு பின்னர் ராதாகிருஷ்ணன் உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டது.