'அதிமுக மாநாட்டில் நீட் தேர்வு தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்?' - அமைச்சர் உதயநிதி கேள்வி


அதிமுக மாநாட்டில் நீட் தேர்வு தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்? -  அமைச்சர் உதயநிதி கேள்வி
x

அதிமுக மாநாட்டில் நீட் தேர்வு தீர்மானம் நிறைவேற்றாதது ஏன் என அமைச்சர் உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை - காரைக்கால் (புதுவை) மாவட்டங்களின் திமுக இளைஞர் அணி செயல்வீரர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது,

மாநாடு எவ்வாறு நடைபெற கூடாது என்பதற்கு ஒரு உதாரணம் அதிமுக நடத்திய மதுரை மாநாடு. அதிமுக மாநாட்டில் யாராவது அரசியலோ ,கொள்கையோ பேசினார்களா?. இல்லை புளிசாதம் ,தக்காளிசாதம் எப்படி இருந்தது என பேசினர். ஆடல் பாடல் ,நகைச்சுவை நிகழ்ச்சிகள் போன்றவை நடந்தன.

அது மாநாடு அல்ல அது ஒரு கேலிக்கூத்து. அதிமுகவிற்கு வரலாறு கிடையாது. நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என கூறும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாங்கள் உண்ணாவிரதம் நடத்திய நாளில் மாநாடு நடத்தியபோது நீங்கள் நீட் தேர்வை எதிர்த்து ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருக்கலாமே? என கேள்வி எழுப்பினார்.


Next Story