ரூ.13¾ கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்


ரூ.13¾ கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்
x

ரூ.13¾ கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வழங்குகிறார்.

அரியலூர்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் அரசு விழாக்களில் கலந்து கொள்ள வருகை தருகிறார். அதன்படி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை 10 மணியளவில் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் 5 தளங்களை கொண்ட 700 படுக்கை வசதிகளுடன் கூடிய பல்வேறு மருத்துவ சேவைகளை தொடங்கி வைக்கிறார்.

இதைத்தொடர்ந்து அவர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் மருத்துவம் பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் மருத்துவ அங்கிகளை வழங்குகிறார். பின்னர் அவர் விழாவில் பேசுகிறார். இதையடுத்து பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 2,539 பயனாளிகளுக்கு ரூ.13.68 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். விழாவில் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.


Next Story