அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு


அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு
x

பரமக்குடி வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ராமநாதபுரம்

பரமக்குடி வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள், மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர்.

பரமக்குடி வந்த உதயநிதி ஸ்டாலினை முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், முன்னாள் மாவட்ட செயலாளர் சுப.த.திவாகரன், மாநில தி.மு.க. இளைஞரணி துணை செயலாளர் இன்பா ரகு, மாவட்ட ஊராட்சி தலைவர் திசைவீரன், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன் தங்கம், யூனியன் தலைவர்கள் ராமநாதபுரம் பிரபாகரன், திருப்புல்லாணி புல்லாணி, லாந்தை ஊராட்சி மன்ற தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், துணைத்தலைவர் கனிப்பிரியா மற்றும் வார்டு உறுப்பினர்கள், மாநில விவசாய அணி துணை செயலாளர் நல்லசேதுபதி, மாநில தகவல் தொழில் நுட்ப அணி துணை செயலாளர்கள் கார்த்திக்மோகன், விஜயகதிரவன், ராமநாதபுரம் மாவட்ட அமைப்பாளர் பகவத்சிங் சேதுபதி, மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் தலைவர் ராதிகா பிரபு, ஜோசப் குழந்தை ராஜா, வசந்தகுமார், அக்பர், நரேஷ்குமார், கண்ணன் தென்னரசு, ஆர்.எஸ்.மங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமசுப்பிரமணியன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் முகமது ஜகாங்கீர், துணை அமைப்பாளர் முகமது அசாருதீன் மற்றும் நிர்வாகிகள் திரளாக சென்று வரவேற்பு அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி சார்பில் மாவட்ட அமைப்பாளர் மண்டபம் சம்பத் ராஜா தலைமையில் நிர்வாகிகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்றனர்.

முதுகுளத்தூர் தி.மு.க.வினர்

முதுகுளத்தூர், சாயல்குடி தி.மு.க. ஒன்றிய கழகம் சார்பில் பரமக்குடி வந்த தமிழ்நாடு இளைஞர் நலன் மேம்பாடு மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சாயல்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபால், கடலாடி வடக்கு ஒன்றிய செயலாளர் ஆப்பனூர் ஆறுமுகவேல், முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பூபதி மணி, சாயல்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன், முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதே போல் முதுகுளத்தூர், கடலாடி, கமுதி ஒருங்கிணைந்த தேவேந்திர குல வேளாளர் சங்கம் சார்பில் அதன் நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பரமக்குடியில் நடைபெற்ற இமானுவேல்சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.


Related Tags :
Next Story