பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்இன்று சேலம் வருகை


பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்இன்று சேலம் வருகை
x

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சேலம் வருகிறார். அவருக்கு தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சேலம்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சேலம் மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் அரசு விழா மற்றும் கட்சி சார்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் கோவையில் இருந்து கார் மூலமாக சேலம் மாவட்டத்திற்கு இன்று (வியாழக்கிழமை) மாலை வருகிறார். அமைச்சராக பொறுப்பேற்று முதன் முதலாக சேலத்திற்கு வரும் அவருக்கு சங்ககிரி சின்னாகவுண்டனூர் பைபாஸ் பகுதியில் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்க தி.மு.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை காலை 9 மணிக்கு நடுவனேரியில் நடக்கும் மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் இல்ல திருமண விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதற்கான ஏற்பாடுகளில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

1,000 பேருக்கு பொற்கிழி

தொடர்ந்து மாலை 4 மணிக்கு எடப்பாடி அருகே குரும்பப்பட்டியில் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடக்கும் கட்சி நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அப்போது அவர் கட்சிக்காக உழைத்த 1,000 பேருக்கு அவர்களின் உழைப்பை கவுரவிக்கும் வகையில் பொற்கிழி மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசுகிறார்.

இதற்காக அங்கு பிரமாண்ட மேடை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்று முதன் முதலாக சேலம் மாவட்டத்திற்கு வருவதால் அவருக்கு பல்வேறு இடங்களிலும் உற்சாக வரவேற்பு அளிக்க தி.மு.க.வினர் ஏற்பாடு செய்துள்ளனர்.


Next Story