சிங்கம்புணரி வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
சிங்கம்புணரி வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும் தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் ்இன்று(சனிக்கிழமை) சிவகங்கை மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக சிவகங்கை மாவட்ட எல்லையான சிங்கம்புணரி என்பீல்டு மேடு பகுதிக்கு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சரும் சிவகங்கை மாவட்ட கழக செயலாளருமான ேக.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர். சிங்கம்புணரி பஸ் நிலையம் முன்பு அண்ணா சிலை அருகே போடப்பட்ட பிரமாண்ட மேடையில் ஏறிய உதயநிதி ஸ்டாலினுக்கு சிவகங்கை மாவட்ட தி.மு.க. சார்பிலும் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பெரிய கருப்பன் சார்பிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துதுரை, துணைத்தலைவர் குணசேகரன், சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.ஆர்.ஆனந்த், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கல்லல் கரு.அசோகன், காரைக்குடி கோட்டையூர் பேரூராட்சி தலைவர் சோலைகார்த்திக், இரா.கோ. சரவணன், கல்லல் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், முன்னாள் நகர இளைஞரணி அமைப்பாளர் காரை சுரேஷ், திருபுவனம் சேர்மன் சேங்கைமாறன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் நாகினி செந்தில்குமார், மாவட்ட அவைத்தலைவர் கணேசன்,உள்பட பலர் வரவேற்றனர்.
சிங்கம்புணரி வரவேற்பை முடித்து காரைக்குடியில் நேற்று இரவு அவர் தங்கினார்.அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்கவும் அலுவலகங்களில் ஆய்வு பணிகள் மேற்கொள்ள உள்ளார்.