அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை வருகை - சுய உதவிக்குழுக்களுக்கு இன்று நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்


அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை வருகை - சுய உதவிக்குழுக்களுக்கு இன்று நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்
x

சென்னையில் இருந்து விமானம் மூலம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு 8 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்தார். இன்று சுய உதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்

மதுரை


மதுரை ரிங்ரோட்டில் உள்ள கலைஞர் திடலில் இன்று (திங்கட்கிழமை) மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.180 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. இதில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு 8 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்தார். இதனை தொடர்ந்து அவர் கார் மூலம் புறப்பட்டு, மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் இரவு தங்கினார்.

முன்னதாக அவரை விமான நிலையத்தில் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், மூர்த்தி, மேயர் இந்திராணி, கலெக்டர் அனிஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜீத் சிங், கூடுதல் கலெக்டர் சரவணன், கோ.தளபதி எம்.எல்.ஏ., மணிமாறன் உள்பட பலர் வரவேற்றனர்.


Related Tags :
Next Story