பாடாலூர் அருகே ஆவின் நிறுவனத்தில் அமைச்சர் ஆய்வு
பாடாலூர் அருகே ஆவின் நிறுவனத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அமைச்சர் ஆய்வு செய்தார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே திருவளக்குறிச்சி கிராமத்தில் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பால் பண்ணையில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளிடம் நிறை, குறைகளை கேட்டு அறிந்தார். மேலும், பாலின் தரம் மற்றும் அங்குள்ள எந்திரங்களை பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சோமு.மதியழகன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story