சோழவந்தான் அரசு பள்ளியில் அமைச்சர்கள் ஆய்வு
சோழவந்தானில் உள்ள பழமையான அரசு பள்ளியில் அமைச்சர்கள் எ.வ.வேலு, மூர்த்தி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
சோழவந்தான்
சோழவந்தானில் உள்ள பழமையான அரசு பள்ளியில் அமைச்சர்கள் எ.வ.வேலு, மூர்த்தி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அரசு பள்ளி
சோழவந்தான் அரசன் சண்முகனார் அரசு மேல்நிலைப்பள்ளி 1918-ம் ஆண்டு ஹெச் டைப்பில் கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த கட்டிட அமைப்பில் உள்ளது. இந்த அரசு பள்ளி கட்டிடம் சேதமடைந்து உள்ளது. முன்னாள் மாணவர்கள் மற்றும் இப்பகுதி சமூகஆர்வலர்கள் பழமை வாய்ந்த இப்பள்ளி கட்டிடத்தை பாதுகாக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து இப்பள்ளியை பழமை மாறாமல் புதுப்பிக்க பொதுப்பணித்துறை பிரதான கட்டிட திட்டத்தின் மூலம் ரூ.5.50 கோடி மதிப்பில் கட்டிடத்தை புதுப்பித்து சுற்றுச்சுவர் அமைக்க அரசு அனுமதி அளித்தது.
அதன்பேரில் இங்கு பழமையான கட்டுமான பொருட்களை கொண்டு அதாவது ஆற்றுமணல், கழுகுமலை சுண்ணாம்பு, நாகர்கோவில் சிப்பிசுண்ணாம்பு, கருப்பட்டி, செங்கல், கடுக்காய் கொண்டு பள்ளி கட்டிட சுற்றுசுவர் புதுப்பித்து வருகிறார்கள்.
அமைச்சர்கள் ஆய்வு
இந்நிலையில் நேற்று இந்த அரசு பள்ளிக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதையொட்டி கட்டுமான பொருட்களை பார்வையிட்டனர். மேலும் கட்டிட பணிகளையும் பார்வையிட்டனர். செயற்பொறியாளர் மணிகண்டன், உதவி பொறியாளர் நான்சி மற்றும் அறம் கன்செக்ஸன் கலைச்செல்வன்சீனி ஆகியோர் கட்டிட பணிகள் குறித்து அமைச்சர்களிடம் எடுத்து கூறினர்.
ஆய்வின்போது கலெக்டர் சங்கீதா, வெங்கடேசன் எம்.எல்.ஏ, மாவட்ட செயலாளர் மணிமாறன், பேரூராட்சி தலைவர் ஜெயராமன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் சத்தியபிரகாஷ், ஒன்றிய கவுன்சிலர் பசும்பொன்மாறன், துணைத்தலைவர் லதாகண்ணன், பேரூராட்சி திட்டகுழு கவுன்சிலர் ஈஸ்வரி ஸ்டாலின், முன்னாள் துணைசேர்மன் அண்ணாதுரை, மாவட்ட விவசாயி அமைப்பாளர் முருகன், ராஜாராமன், வார்டு கவுன்சிலர்கள், பள்ளி உதவி தலைமை ஆசிரியை பிரியதர்ஷினி, ஆய்வாளர் சுப்புலட்சுமி, சோலைக்குறிச்சி கிராமநிர்வாக அலுவலர் கார்த்திஈஸ்வரி, ஆசிரியர் கார்த்திக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்பகுதி கிராமமக்கள் இந்தப் பள்ளியை கல்லூரி ஆக ஏற்படுத்திக் கொடுக்க அமைச்சர் களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.