ரூ.3 கோடி 69 லட்சத்தில்நலத்திட்ட உதவிகள்


ரூ.3 கோடி 69 லட்சத்தில்நலத்திட்ட உதவிகள்
x
திருப்பூர்


பொங்கலூரில் நடைபெற்ற விழாவில் 1,866 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 69 லட்சம் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன்,கயல்விழி வழங்கினார்கள்.

1,866 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

ஈடில்லா ஆட்சி இரண்டு ஆண்டே சாட்சி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பொங்கலூர் அருகே உள்ள கொடுவாய் சுப்பராய கவுண்டர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் டாக்டர். வினீத் தலைமை தாங்கினார். விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள். இந்த விழாவின்போது மொத்தம் 1,866 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 69 லட்சத்தில பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவில் வழங்கி அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

இந்த திட்டம் தமிழ்நாடு முழுவதும் வழங்கப்பட்ட வருகிறது. இந்த திட்டங்களின் மூலம் மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு ஒரு வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறது. ஆட்சி பொறுப்பேற்ற போது கொரோனா தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டு அந்த கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வர சுமார் 8 மாத காலம் தேவைப்பட்டது. அதிலிருந்து மீண்டு வந்து இன்று ஆட்சி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

1½லட்சம் பேருக்கு சிகிச்சை

கலைஞர் 1996 -ம் ஆண்டு கொண்டு வந்த வருமுன் காப்போம் திட்டம் ஏழை-எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நோயை ஆரம்ப கட்டத்திலேயே சரி செய்வது தான் இந்த திட்டத்தின் நோக்கம். மக்களை தேடி மருத்துவம் திட்டம் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இதுவரையிலும் சுமார் 1½ லட்சம் பேருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 மகளிருக்கு கட்டணம் இல்லா பேருந்து உள்பட பல்வேறு சிறப்பான திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், சப்- கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், தாராபுரம் ஆர்.டி.ஓ. குமரேசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முழுமையின் திட்ட இயக்குனர் லட்சுமணன், திட்ட இயக்குனர் (மகளிர்) வரலட்சுமி, திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவரும்,தி.மு.க.தெற்கு மாவட்ட செயலாளருமான இல.பத்மநாபன், பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ். குமார், பொங்கலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அசோகன், கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலுசாமி ஒன்றிய கவுன்சிலர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story