தமிழக முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 1,600 பேருக்கு பரிசு அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் வழங்கினர்


தமிழக முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 1,600 பேருக்கு பரிசு அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் வழங்கினர்
x
தினத்தந்தி 19 Jun 2023 12:15 AM IST (Updated: 19 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தமிழக முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 1,600 பேருக்கு பரிசுகளை அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் வழங்கினர்.

விழுப்புரம்

விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா விழுப்புரம் அண்ணா பொறியியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர். லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த 1600 பேருக்கு ரூ.41 லட்சத்து 58 ஆயிரத்தை பரிசு தொகையாக வழங்கினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், ஒன்றியக்குழு தலைவர்கள் சச்சிதானந்தம், சிவ சக்திவேல், மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் ஷீலா தேவி சேரன், அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி முதல்வர் செந்தில், மாவட்ட விளையாட்டு அலுவலர் வேல்முருகன், அரசு போக்குவரத்து கழக நிர்வாக பணியாளர் சங்க பொதுச் செயலாளர் வாலிபால் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story