மத்தூர் அருகே மினிவேனில் இருந்து இரும்பு ராடுகள் விழுந்து விபத்து


மத்தூர் அருகே  மினிவேனில் இருந்து இரும்பு ராடுகள் விழுந்து விபத்து
x

மத்தூர் அருகே மினிவேனில் இருந்து இரும்பு ராடுகள் விழுந்து விபத்து ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி

மத்தூர்:

திருப்பத்தூரில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரை நோக்கி இரும்பு பைப்புகள், ராடுகள் ஏற்றி கொண்டு மினி வேன் ஒன்று வந்து கொண்டு இருந்தது. மத்தூர் அருகே உள்ள சிவம்பட்டி பகுதியில் வந்தபோது திடீரென இரும்பு ராடுகளை கட்டியிருந்த கயிறு துண்டானது. இதனால் மினி வேனில் இருந்த இரும்பு ராடுகள் வண்டியின் முன்பக்கமாக சறுக்கி சாலையில் விழுந்தன. இதனால் டிரைவர் வேனை நிறுத்தினார். அப்போது அந்த வழியே எந்த வாகனங்களும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story