சிறுபான்மையினர் கடன் பெற விண்ணப்பிக்கலாம்
சிறுபான்மையினர் கடன் பெற விண்ணப்பிக்கலாம்
திருப்பூர்
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுயஉதவிக்குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்விக்கடன் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி, ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்களின் மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, ரேஷன் கார்டு, இருப்பிடச்சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுனர்உரிமம், கூட்டுறவு வங்கி கோரும் மற்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்றுசான்றிதழ், உண்மை சான்றிதழ், கல்விக்கட்டணங்கள் செலுத்திய ரசீது, மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை 0421 2999130 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-----------------