மாணவர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி கலந்துரையாடல்


மாணவர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி கலந்துரையாடல்
x

திருவையாறு அருகே கண்டியூர் அரசு பள்ளியில் மாணவர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி கலந்துரையாடினார். அப்போது அவர் மாணவர்களிடம் வருங்கால விருப்பம் குறித்து கேட்டறிந்தார்.

தஞ்சாவூர்

திருவையாறு;

திருவையாறு அருகே கண்டியூர் அரசு பள்ளியில் மாணவர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி கலந்துரையாடினார். அப்போது அவர் மாணவர்களிடம் வருங்கால விருப்பம் குறித்து கேட்டறிந்தார்.

பள்ளிக்கு சென்ற அமைச்சர்

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே கண்டியூர் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 130 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தஞ்சாவூரில் இருந்து திருவையாறு வழியாக சென்னைக்கு காரில் சென்றார். அப்போது அவர் திடீரென காரை நிறுத்தி கண்டியூர் பள்ளிக்குள் சென்றாா்.

வருங்கால விருப்பம்

பள்ளியில் அமைச்சர் நுழைந்த போது, இறைவணக்க கூட்டம் நடந்துக்கொண்டிருந்தது. பின்னர், மாணவர்கள் அமைச்சரை கைத்தட்டி வரவேற்றனர். அப்போது, மாணவர்களிடம் வருங்காலத்தில் எந்த பதவிக்கு வர விரும்புகிறீர்கள் என கேட்டார்.

அப்போது 7-ம் வகுப்பு படிக்கும் தினேஷ் என்ற மாணவனை அழைத்த அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி மாணவனிடம், நீ வருங்காலத்தில் என்னவாக ஆசைப்படுகிறாய் என கேட்டார். அப்போது அந்த மாணவன், அமைச்சரிடம் நான் மெக்கானிக்கல் என்ஜினீயராக ஆசைப்படுகிறேன் என கூறினான்.

3 ஆண்டுகள்

பின்னர் அமைச்சர் மாணவர்களிடம் யாரெல்லாம், டாக்டர், கலெக்டர், போலீஸ், ஆசிரியைாக வரபோகிறார்கள் என கேட்டார். பிறகு, ஆசிரியர்கள் சொல்லும் அறிவுரைகளை கேட்டு, அதன்படி நடந்துக்கொள்ள வேண்டும். நன்றாக படிக்க வேண்டும். ஆசிரியர்கள் உங்களை திட்டுகிறார்கள் என்றால், நீங்கள் நல்ல வரவேண்டும் என்பதற்காக தான். பெற்றோர் கூறும் அறிவுரையையும் கேட்டு நடக்க வேண்டும். குறிப்பாக 10-ம் வகுப்பு மாணவர்கள் இன்னும் 3 ஆண்டுகள் நன்றாக படிக்க வேண்டும். அது தான் உங்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் என அறிவுரை வழங்கினார். பின்னர் பள்ளிக்கு கூடுதல் இடம் கேட்டு அமைச்சரிடம், பள்ளி தலைமை ஆசிரியர் மனோகரன், உதவி தலைமையாசிரியர் கண்ணதாசன் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர். இதை பரிசீலிப்பதாக அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி கூறினார்.


Next Story