வக்கீலுக்கு செல்போனில் கொலைமிரட்டல்


வக்கீலுக்கு செல்போனில் கொலைமிரட்டல்
x
திருப்பூர்


திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சுந்தரேஸ்வரன், பொருளாளர் சபரிகீதன் மற்றும் நிர்வாகிகள் தலைமையில் திருப்பூர் வள்ளியம்மை நகரை சேர்ந்த வக்கீல் பாலசுப்பிரமணி என்பவர் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார்.

அந்த மனுவில், 'நான் திருப்பூர் மாவட்ட கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறேன். நேற்றுமுன்தினம் பி.என்.ரோட்டில் உள்ள எனது அலுவலகத்தில் இரவு இருந்தபோது எனது செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது. அதில் என்னைப்பற்றியும், எனது குடும்பத்தை பற்றியும் தரக்குறைவாக திட்டியும், கொலைமிரட்டல் விடுத்தும் வாசகங்கள் இடம்பெற்று இருந்தது. அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அதன்பிறகு எனது நண்பரின் வாட்ஸ்-அப் அழைப்பில் வந்த நபர், குடும்பநல நீதிமன்றத்தில் உள்ள விவாகரத்து வழக்கில் நான் ஆஜராகியுள்ளேன். அந்த வழக்கில் ஆஜராக கூடாது என்று மிரட்டி பேசினார். அந்த வழக்கின் எதிர் தரப்பினரின் உறவினர்கள் தான் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.


Next Story