மருந்து கடையில் புகுந்து மர்ம நபர்கள் தாக்குதல்
ஆம்பூர் போலீஸ் நிலையம் எதிரில் மருந்து கடையில் புகுந்து மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர்.
திருப்பத்தூர்
ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையம் எதிரில் மருந்து கடை ஒன்று இயங்கி வருகிறது. மருந்து கடை இருக்கும் இடம் தொடர்பான தகராறு காரணமாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் நேற்று மர்ம நபர்கள் சிலர் மருந்து கடையில் புகுந்து மருந்து கடை உரிமையாளர் உள்பட இருவரை தாக்கி அங்கிருந்த பொருட்கள் மற்றும் கண்ணாடியை சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக மருந்து கடை உரிமையாளர் ராஜேஷ் ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையம் எதிரிலேயே உள்ள மருந்து கடையில் புகுந்து கண்ணாடி மற்றும் பொருட்களை சேதப்படுத்திய சம்பவம் ஆம்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story