குப்பை கிடங்கில் தீ வைத்த மர்ம நபர்கள்


குப்பை கிடங்கில் தீ வைத்த மர்ம நபர்கள்
x

சோளிங்கர் அருகே குப்பை கிடங்கில் மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

ராணிப்பேட்டை

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தினமும் தெருக்கள், வீடுகள், ஓட்டல்கள் தோறும் சேகரிக்கப்படும் சுமார் 10 டன் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்க திருத்தணி சாலையில் இடம் இருந்தும், 10 டன் குப்பைகளை ஜெ.ஜெ. நகர் மலைப்பகுதியில் கொட்டி வருகின்றனர். இதனால் இங்கு குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இந்த குப்பைகளில் மர்ம நபர்கள்தீ வைத்துள்ளனர். இதனால் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக குப்பை கொழுந்து விட்டு எரிந்தது. இதில் இருந்து எழுந்த நச்சுப்புகை அருகில் உள்ள அய்யப்பசாமி கோவில், ஜெ.ஜெ. நகர் பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறி, துர்நாற்றம் வீசியது. ஒருசிலர் சுவாச பிரச்சினையால் அவதிப்பட்டனர்.

சோளிங்கர் நகராட்சி நிர்வாகத்தின் அலச்சியமே இந்த குப்பை கிடங்கு எரிவதற்கு காரணம் என நகராட்சி நிர்வாகம் மீது குற்றம் சாட்டுகின்றனர். இனிவரும் காலங்களில் நகராட்சி நிர்வாகம் குப்பை கிடங்கை முறையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story