கால்நடை பராமரிப்பு பணி குறித்து வாட்ஸ்-அப்பில் தவறான தகவல் - கலெக்டர் விஷ்ணு
கால்நடை பராமரிப்பு பணி குறித்து வாட்ஸ்-அப்பில் தவறான தகவல் பரப்பப்படுவதாக கலெக்டர் விஷ்ணு கூறியுள்ளார்.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-
தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் கால்நடை பராமரிப்பாளர் மற்றும் டிரைவர் ஆகிய பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு மூலம் ஆள் எடுப்பதாகவும், சம்பளம் முறையே ரூ.15 ஆயிரம் மற்றும் ரூ.18 ஆயிரம் எனவும், தகுதி மற்றும் வயது ஆகியவை நிர்ணயம் செய்யப்பட்டு 90 மணி நேர பயிற்சி அளித்து பணி நியமன ஆணை வழங்கப்படும் எனவும், இதற்கான ஆணை ஜூன் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் எனவும் விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்திடுமாறும், கால்நடை பராமரிப்பாளர், டிரைவர் பணியிடங்களுக்கு தலா 160 பணியிடங்கள் எனவும் வாட்ஸ்-அப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாட்ஸ்-அப் மூலம் பெறப்படும் தகவல்கள் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை தொடர்பு இல்லாதவை. தவறான தகவல் பரப்பப்படுகிறது. எனவே இதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.