விருதுநகர் ெரயில் நிலையத்தில் மாயமான சிறுமி தூத்துக்குடியில் மீட்பு


விருதுநகர் ெரயில் நிலையத்தில் மாயமான சிறுமி தூத்துக்குடியில் மீட்பு
x

விருதுநகர் ரெயில் நிலையத்தில் மாயமான சிறுமி தூத்துக்குடியில் மீட்கப்பட்டார்.

விருதுநகர்

விருதுநகர் ரெயில் நிலையத்தில் மாயமான சிறுமி தூத்துக்குடியில் மீட்கப்பட்டார்.

சிறுமி மாயம்

கடந்த சில தினங்களுக்கு முன்பு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த 14 வயது சிறுமி கோவில்பட்டிக்கு முன்பதிவு இல்லாத ெரயில் பெட்டியில் டிக்கெட் எடுத்து வந்தார். இந்த நிலையில் இடையில் விருதுநகர் ெரயில் நிலையத்தில் அவர் இறங்கி மாயமாகிவிட்டார். இது பற்றி சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் ெரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அந்த சிறுமி தூத்துக்குடியில் ஒரு வீட்டில் உள்ளதாக தெரிய வந்தது.

விசாரணையில் அந்த சிறுமி கள்ளக்குறிச்சியில் 9-ம் வகுப்பு படித்த நிலையில் 10-ம் வகுப்பில் சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சேர்ப்பதற்காக நுழைவுத்தேர்வு எழுத சென்னை சென்றார். அப்போது ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் செல்போனில் தொடர்பு கொண்டு தூத்துக்குடியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றது தெரிய வந்தது

மீட்பு

ெரயில்வே போலீசார் அங்கு சென்று விசாரித்த போது அந்த வீட்டில் இருந்தவர்கள் இந்த சிறுமி வீட்டுக்கு வந்தவுடன் எங்கள் வீட்டில் திருமண வேலை நடந்து கொண்டிருந்ததால் உடனடியாக போலீசாருக்கும் சிறுமியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்க முடியவில்லை என்றும் திருமண வேலை முடிந்ததும் தகவல் தெரிவிக்கலாம் என்று இருந்த நிலையில் நீங்கள் (போலீசார்) வந்து விட்டதால் உங்களிடம் ஒப்படைக்கிறோம் என்று சிறுமியை விருதுநகர் ெரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அந்த சிறுமியை விருதுநகர் காப்பகத்தில் வைத்துள்ளனர். இது பற்றி சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story