காணாமல் போன பெண், கிணற்றில் பிணமாக மீட்பு
ஜோலார்பேட்டை அருகே காணாமல் போன பெண், கிணற்றில் பிணமாக மீட்பு
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் இவரது மகள் சந்தியா (வயது23).
இவருக்கும் திருப்பத்தூரை அடுத்த புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சந்தியா (வயது 23). கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு கவின் என்ற ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது. சந்தியா மனநிலை பாதிக்கப்பட்டது போல் பேசி வந்துள்ளார்.
இந்த நிலையில் பிரபாகரன் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு செல்வதால் நேற்று சந்தியாவையும், குழந்தையையும் தாய் வீடான மண்டலவாடியில் விட்டு விட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் சந்தியா திடீரென காணாமல் போய்விட்டார்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சந்தேகத்தின்பேரில் போலீசார், தீயணைப்பு வீரர்களை வரவழைத்து அங்குள் கிணற்றில் பாதாள சங்கிலி போட்டு தேடினர்.
அப்போது சந்தியா கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.