டெல்லிக்கு போகாமலேயே இந்தியா முழுவதும் பிரபலமானார் மு.க.ஸ்டாலின் - துரைமுருகன் பேச்சு


டெல்லிக்கு போகாமலேயே இந்தியா முழுவதும் பிரபலமானார் மு.க.ஸ்டாலின் - துரைமுருகன் பேச்சு
x

. அவர் இன்னும் அரசியலில் சாணக்கிய தன்மையோடு விளங்கி மாபெரும் வெற்றியை தமிழ்நாட்டுக்கு தருவார்

சென்னை,

இன்று நடந்த திமுக பொதுக்குழுவில் ,பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசியதாவது:

தி.மு.க.வில் அண்ணா, நெடுஞ்செழியன், அன்பழகன் ஆகியோர் பொதுச் செயலாளராக இருந்துள்ளனர். என்னை 4-வது பொதுச்செயலாளராக உட்கார வைத்திருக்கிற தளபதியே உங்களுக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றி தெரிவிப்பேன். அண்ணாவுக்கு பிறகு கலைஞர் இந்திய துணை கண்டத்தையே ஆட்டிப்படைக்கின்ற தலைவராக இருந்தார். அவர் நினைத்தவர் தான் ஜனாதிபதியாக வர முடிந்தது. அவர் நினைத்தவர் தான் பிரதமராக வர முடிந்தது. கலைஞர் கூட முதல்- அமைச்சரான பிறகு டெல்லிக்கு போய் அவர் அரசியல் சாணக்கிய தனத்தை காட்டிய பிறகு தான் அவர் அங்கு பிரபலமானார். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லிக்கு போகாமல் இங்கு உட்கார்ந்து கொண்டே இந்தியா முழுவதும் பிரபலமான பெருமை தளபதிக்கு மட்டுமே உண்டு. அவர் இன்னும் அரசியலில் சாணக்கிய தன்மையோடு விளங்கி மாபெரும் வெற்றியை தமிழ்நாட்டுக்கு தருவார். இந்த கழகம் மேலும் மேலும் வளருவதற்கு உறுதுணையாக இருப்பார். அவருக்கு உறுதுணையாக ஆலோசனை சொல்ல அவரோடு இருந்து பணியாற்ற எனக்கு இந்த வாய்ப்பை அளித்த தளபதிக்கு நன்றி தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


Next Story