கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் எம்.எல்.ஏ. ஆய்வு
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
சாத்தூர்,
சாத்தூர் நகராட்சி கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தினமும் எவ்வளவு கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் மூலம் எவ்வளவு நீர் உற்பத்தியாகிறது என்றும் அங்கு உள்ள எந்திரங்களின் பணிகள் குறித்தும், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் தேவைகள் குறித்தும் ரகுராமன் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் இந்த பணிகள் குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் ஆராய்ச்சிக்கு உட்பட்ட கழிவு நீர் சேமிப்பு கிடங்குகளையும் பார்வையிட்டு அங்கு நடைபெறும் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மரக்கன்றுகள் நட்டார். ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் இளவரசன், சுகாதார அலுவலர் வெங்கடேசன், ம.தி.மு.க. நகர செயலாளர் கணேஷ்குமார், ஒன்றிய செயலாளர்கள் குணசேகரன், பாலகிருஷ்ணன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ராஜமோகன் ஆகியோர் உடனிருந்தனர்.