கீழக்கரையில் எம்.எல்.ஏ. ஆய்வு


கீழக்கரையில் எம்.எல்.ஏ. ஆய்வு
x
தினத்தந்தி 25 Sept 2023 12:15 AM IST (Updated: 25 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கீழக்கரை நகராட்சி பகுதியில் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்

ராமநாதபுரம்

கீழக்கரை நகராட்சி பகுதிகளில் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். அப்போது பஸ் நிலையம், மீன் மார்க்கெட் பகுதியில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடத்தை பார்வையிட்டார். அப்போது அவரிடம் புதிய பஸ் நிலையம் மற்றும் புதிய மீன் மார்க்கெட் அமைப்பதற்கு பொதுமக்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எம்.எல்.ஏ., உறுதி கூறினார். தொடர்ந்து முத்துசாமிபுரத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூடம், ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமையல் அறை கூடத்தையும் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி திறந்து வைத்தார். பின்னர் நடந்த நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தி.மு.க.வில் எம்.எல்.ஏ. முன்னிலையில் இணைந்தனர்.

நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா, நகராட்சி கமிஷனர் செல்வராஜ், பொறியாளர் அருள், சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா, மாவட்ட அயலக அணி தலைவர் முகமது ஹனிபா, மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் இப்திகார் ஹசன், கவுன்சிலர்கள் நசீருதீன், மீரான் அலி, ஹாஜா சுஹைபு, சப்ராஸ் நவாஸ், காயத்ரி, சூரிய கலா, முன்னாள் கவுன்சிலர் ஜைனுதீன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story