வேலூர் மாநகராட்சியில் ரூ.2 கோடியில் நடைபெறும் சாலை பணிகளை எம்.எல்.ஏ., மேயர் ஆய்வு
வேலூர் மாநகராட்சியில் ரூ.2 கோடியில் நடைபெறும் சாலை பணிகளை எம்.எல்.ஏ., மேயர் ஆய்வு செய்தனர்.
வேலூர்
வேலூர் மாநகராட்சியில் ரூ.2 கோடியில் நடைபெறும் சாலை பணிகளை எம்.எல்.ஏ., மேயர் ஆய்வு செய்தனர்.
வேலூர் மாநகராட்சியில் கொணவட்டம், கஸ்பா வசந்தபுரம், பத்மாவதிநகர், தேவிநகர், சின்னஅல்லாபுரம் போன்ற பகுதிகளில் ரூ.1 கோடியே 98 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது. சின்னஅல்லாபுரத்தில் நடைபெற்ற பணியை வேலூர் எம்.எல்.ஏ. கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது பணிகள் தரமானதாக அமைக்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர். மேலும் சாலைகளை தரமானதாக அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.
Related Tags :
Next Story