சோளிங்கர் தொகுதியில் நடைபெறும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் முனிரத்தினம் எம்.எல்.ஏ. கோரிக்கை

சோளிங்கர் தொகுதியில் நடைபெறும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் முனிரத்தினம் எம்.எல்.ஏ. கோரிக்கை
x
தினத்தந்தி 28 Sept 2022 12:15 AM IST (Updated: 28 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சோளிங்கர் தொகுதியில் நடைபெறும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்து முனிரத்தினம் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.

ராணிப்பேட்டை

சோளிங்கர்

சோளிங்கர் தொகுதியில் நடைபெறும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்து முனிரத்தினம் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.

சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம், சென்னை தலைமை செயலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவை நேரில் சந்தித்தார்.

அப்போது ''சோளிங்கரில் நீண்ட நாள் பிரச்சினையான போக்குவரத்து நெரிசலை தீர்க்க அரசு புறவழிச்சாலை அறிவித்தது. இந்த பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும், சோளிங்கர் தொகுதிக்கு உட்பட்ட அன்வர்திக்கான் பேட்டையை சுற்றியுள்ள கிராம மக்கள் பயன்படும் வகையில் ெரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுப்பணித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும்'' என வலியுறுத்தினார்.

அவரது கோரிக்கையை ஏற்று பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டார்.

Next Story