அ.தி.மு.க. கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கிவிட்டது; தேன்மொழி சேகர் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு


அ.தி.மு.க. கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கிவிட்டது; தேன்மொழி சேகர் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 13 March 2023 2:00 AM IST (Updated: 13 March 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கிவிட்டது என்று நிலக்கோட்டை எம்.எல்.ஏ. தேன்மொழி சேகர் குற்றம்சாட்டினார்.

திண்டுக்கல்

அ.தி.முக. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், நிலக்கோட்டை பஸ் நிலையம் முன்பு நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நிலக்கோட்டை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் யாகப்பன் தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, அம்மையநாயக்கனூர் நகர செயலாளர் தண்டபாணி, முன்னாள் எம்.பி. உதயகுமார், நிலக்கோட்டை நகர செயலாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தேன்மொழி சேகர் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த அனைத்து நலத்திட்டங்களையும் தி.மு.க. முடக்கிவிட்டது. அதுமட்டுமின்றி ஜனநாயக முறையில் இடைத்தேர்தல் நடத்தாமல் மக்களை ஈரோட்டில் அடைத்து வைத்து செயல்பட்ட அரசுதான் தி.மு.க. இனி வரும் தேர்தல்களில் தி.மு.க.வுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றார்.

இந்த கூட்டத்தில் வத்தலக்குண்டு ஒன்றிய செயலாளர்கள் மோகன், பாண்டியன், மாவட்ட துணைச்செயலாளர் விஜய பாலமுருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரேவதி தங்கபாண்டியன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மூர்த்தி, மாவட்ட வக்கீல் பிரிவு துணைச் செயலாளர் புரட்சிமணி, முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் கனிக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story