தேங்கிய மழைநீரை வெளியேற்ற எம்.எல்.ஏ. நடவடிக்கை
ராஜபாளையத்தில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற எம்.எல்.ஏ. நடவடிக்கை மேற்கொண்டார்.
விருதுநகர்
ராஜபாளையம்,
ராஜபாளையம் நகராட்சிக்குட்பட்ட கணபதியாபுரம் கிழக்கு பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்லும் ஓடை பாலம் உள்ளது. இப்பகுதியில் பெய்த மழையால் பாலத்தின் அடியில் மழைநீர் அதிக அளவில் சென்றதால் அப்பகுதி வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதைத்தொடர்ந்து தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது அவர்கள் தேங்கி தண்ணீரை உடனே வெளியேற்ற நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவிட்டனர். ஆய்வின் போது நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி, நகர செயலாளர் ராமமூர்த்தி, கவுன்சிலர்கள் கார்த்திக், அருள்உதயா மற்றும் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story