விளாத்திகுளத்தில் விபத்தில் காயமடைந்த 2 வாலிபர்கள் குடும்பத்திற்கு எம்.எல்.ஏ. நிதி உதவி
விளாத்திகுளத்தில் விபத்தில் காயமடைந்த 2 வாலிபர்கள் குடும்பத்திற்கு எம்.எல்.ஏ. நிதி உதவி வழங்கினார்.
எட்டயபுரம்:
விளாத்திகுளத்தில் மதுரை ரோடு பி.எஸ்.என்.எல் அலுவலகம் எதிரே நேற்று முன்தினம் இரவு நடந்த மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஏ.குமராபுரத்தை சேர்ந்த கற்பகராஜ் (வயது 28), ஜமீன்கரிசல்குளத்தைச் சேர்ந்த அன்பரசன் (28) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இந்த 2 பேரும் விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த மார்கண்டேயன் எம்.எல்.ஏ. அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் ெசன்று அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அரசு மருத்துவர் சுரேஷ்குமாரிடம் கேட்டறிந்தார். மேலும் அந்த 2பேரையும் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, டீனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க கேட்டுக் கொண்டார். அத்துடன் அந்த 2 வாலிபர்களின் குடும்பத்தினருக்கு எம்.எல்.ஏ. நிதி உதவி வழங்கினார்.