3 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று குறை கேட்ட எம்.எல்.ஏ.


3 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று குறை கேட்ட எம்.எல்.ஏ.
x

ஏலகிரி மலையில் 3 கிலோமீட்டர் தூரம் எம்.எல்.ஏ. நடந்து சென்று குறை கேட்டார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. சுற்றுலா தலமான இங்கு சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மலைவாழ் மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நேற்று திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜ் ஏலகிரி மலையில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

ஏலகிரி மலையில் ராயனேரி பகுதியில் உள்ள மலைப்பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்களின் இடத்திற்கு 3 கிலோமீட்டர் வரையில் நடந்து சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் இப்பகுதியில் இதுவரையிலும் சாலை வசதிகள் இல்லாமல் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டிருந்தனர். , ரேஷன் கடைகளுக்கு சுமார் ஏழு கிலோமீட்டர் தூரம் வரை செல்ல வேண்டிய நிலை உள்ளது. கர்ப்பிணி பெண்கள் சுமார் ஆறு கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது எனவும், நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம் என்று கூறியுள்ளனர். எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி மண்சாலை அமைக்க ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார்.

மேலும் புத்தூர் பகுதியில் சேதம் அடைந்த மின்கம்பங்களையும், ரேஷன் கடை அமைப்பதற்கான இடத்தையும் ஆய்வு செய்தார். பள்ளக்கணியூர் பகுதியில் உள்ள பொட்டானிக்கல் கார்டன் பகுதியை ஆய்வு செய்தபோது அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுக்கான இடத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story