எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம்
தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது
தென்காசி
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், பழனி நாடார், சதன் திருமலை குமார் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயினுலாப்தீன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் முத்து மாதவன், ஷேக் அப்துல்காதர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சமீபத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தங்களது தொகுதிகளில் நீண்ட நாட்களாக தேவையான 10 கோரிக்கைகளை கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த கூட்டத்தில் அந்த கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
Related Tags :
Next Story